சிங்கப்பூர் உணவு பிரியர்களே உசார்!!சிங்கப்பூரின், SFA (Singapore Food Agency) தற்போது சிங்கப்பூரில் உள்ள அனைத்து ஹோட்டல்கள் மற்றும் உணவு தொடர்பான நிறுவனங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் சிங்கப்பூரின் பிரபல நிறுவனமான “Proofer” பேக்கரியில் கடந்த டிசம்பர் 6 அன்று ஆய்வு நடத்தப்பட்டது. அதிகாரிகளின் ஆய்வில் , Proofer பேக்கரியின் மைய சமையலறையானது , இறந்த எலிகள் மற்றும் அழுக்கு படிந்த கதவுகள் , எச்சங்கள் என சுகாதாரமற்ற நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது.இதனால் Proofer பேக்கரிக்கு S$ 3000 அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே 2021 அக்டோபரில் இதே போன்ற ஒரு குற்றச்சாட்டால் Proofer பேக்கரியின் அனைத்து கிளைகளும் தற்காலிகமாக ஜனவரி 2022 வரையிலும் மூடப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அங்கீகரிக்கப்பட்ட உணவு நிறுவனங்கள் இது போன்ற சுகாதாரமற்ற நிலையில் இயங்கி வருவதை ஆய்வில் கண்டறியப்பட்டால் அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும் எனவும் SFA தரப்பில் தெரிவித்து உள்ளனர்.