சிங்கப்பூரில் வரும் நவம்பர் 18 ஆம் தேதி , அனைத்துலக வெளிநாட்டு ஊழியர் தினத்தை விமர்சையாக கொண்டாடும் வகையில் பல்வேறு அசத்தலான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதன் முதல் வெளிப்பாடாக , இத்தினத்தின் முக்கிய கதாநாயர்களான ” வெளிநாட்டு ஊழியர்களை ” உற்சாகப்படுத்தும் விதமாக அவரவர் தாய் நாட்டின் மிகச்சிறந்த சமையல் குறிப்புகள் அடங்கிய நூல்தொகுப்பு ஒன்று ,” Our Migrants’ Kitchen ” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நூலானது மனிதவள அமைச்சகம் (MOM) இன் ACE குழுவினரால் , சிங்கப்பூரில் உள்ள Our Trampines Hub – இல் வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டும் இன்றி வெளிநாட்டு ஊழியர்களின் பங்களிப்பை சிறப்பிக்கும் வகையில் அவர்களுக்கென கண்காட்சி திருவிழா ஒன்றையும், நூல் வெளியீட்டு விழாவின் போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த நூலில் வெளிநாட்டு ஊழியர்களின் தாய் நாட்டு உணவு வகைகள் மட்டும் இன்றி சிங்கப்பூரில் அவர்களுக்கு கிடைத்த அனுபவங்களின் இனிப்பான கதைகளும் அடங்கும்.
சொந்த தாய் நாட்டில் இருந்து , உறவுகளை பிரிந்து சிங்கப்பூரில் வேலை செய்யும் ஊழியர்களை நினைவுகூறும் வகையில் இந்த நூல் அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இது மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.