இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக தொடர் கனமழை பெய்தது.
இந்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.கனமழை காரணமாக சிங்கார சென்னை வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
இந்த புயல் மற்றும் கனமழை காரணமாக சென்னையின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் சென்னையில் உள்ள சாலைகள் ஆறு போல் காட்சியளிக்கிறது.மேலும் இந்த வெள்ளத்தில் வாகனங்கள் பல அடித்துச் செல்லப்பட்டன.
தாழ்வான பகுதிகள் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. புயல் காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்தன.
சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக மீட்புப் பணிகள் தடைபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நகரம் முழுவதும் சூழ்ந்துள்ள மழை நீர், 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தை நினைவுகூறும் வகையில் இருப்பதாக கூறினர்.
2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 290 பேர் உயிரிழந்தனர்.