தெற்கு தாய்லாந்தில் டபுள்-டெக்கர் பேருந்து ஒன்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 32 பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் விபத்துக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்று அவர்கள் கூறினர்.
அந்தப் பேருந்து பேங்காக்கில் இருந்து தொலைதூரப் பயணம் மேற்கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
விபத்தின் போது பேருந்து ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
மேலும் அவர் மது போதையில் இருந்தாரா என்பதை பரிசோதித்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
பேருந்து ஓட்டுநர் பலத்த காயங்களுடன் உயிர்பிழைத்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்களா என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
உலகில் சாலை விபத்துகள் அதிகமாக ஏற்படும் நாடுகளில் தாய்லாந்தும் ஒன்று.
இங்கு வருடத்திற்கு 20,000 பேர் சாலை விபத்துகளில் மரணமடைவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.