ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 56 வயதான சுற்றுலாப் பயணி ஒருவர் சீனாவில் உள்ள மக்காவ் டவரில் இருந்து உலகின் மிக உயரமான Bunjee jumping சாகசத்தை முடித்த சில மணி நேரங்களிலேயே உயிரிழந்துள்ளார்.
டிசம்பர் மூன்றாம் தேதியன்று மாலை 4:30 மணியளவில் 233 மீட்டர் உயரத்தில் இருந்து இந்த சாகசத்தை அவர் புரிந்தார்.
அதன் பிறகு அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அவர் இறந்ததற்கான காரணம் தெளிவாக தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
மேலும் குதித்ததன் விளைவாக அவருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
Bunjee jumping சாகசம் புரிய நபர் ஒருவருக்கு தலா US$359 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதய நோய், வலிப்பு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய் உள்ளவர்கள் இந்த சாகசத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவதில்லை.
மேலும் பங்கேற்பாளர்கள் அவர்களின் மருத்துவ நிலைமைகளை தெரிவிக்க வேண்டும் என்று நிறுவனம் தெளிவாகக் கூறுகிறது.
பங்கேற்பாளர்களின் பாதுகாப்பே முதன்மையானது என்று நிறுவனம் வலியுறுத்துகிறது.