சைபீரியாவின் சில பகுதிகளில் தட்பவெப்ப நிலை மைனஸ் 50 டிகிரி செல்சியஸாக குறைந்தது.
சைபீரியாவின் வடகிழக்கு பகுதி மற்றும் பரப்பளவில் இந்தியாவை விட சிறிய பகுதியான சாக்காவில் வெப்பநிலை மைனஸ் 50 டிகிரி செல்சியஸுக்கும் குறைந்துள்ளது.
இப்பகுதியில் தான் Yakutsk எனப்படும் உலகின் மிகக் குளிரான நகரம் அமைந்துள்ளது.
இப்பகுதியில் வெப்பநிலை மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் வரை செல்வது குறைந்துவிட்டதாக தெரிவித்தனர்.அதற்கு காரணம் காலநிலை மாற்றம் என்று கூறப்படுகிறது.
ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் இதுவரை கண்டிராத அளவுக்கு பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.
இதனால் அங்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் இந்த வார இறுதியில் மாஸ்கோவின் வெப்பநிலை மைனஸ் 18 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது