மிக்ஜாம் புயலானது மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் அதி தீவிர புயலாக மாறி வருகிறது. 110 கிலோமீட்டர் தொலைவில் சென்னையிலிருந்து மையம் கொண்டுள்ள மிக்ஜாம் புயல். புயலானது நம்மை நோக்கி வர வர தாக்கமானது மிகவும் அதி பயங்கரமாக மாறி வருகிறது. மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னை மற்றும் சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களில் அதிக கன மழை வெளுத்து வாங்கி வருகிறது .
இந்த சூழ்நிலையில் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அமைச்சர் மா. சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். மேலும் கடலோரப் பகுதிகள் மற்றும் ஆற்றங்கரை பகுதிகளில் வசித்து வரும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற அவர் ஏற்பாடு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயலால் சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள வீடுகளில் மழைநீர் செல்வதால் அங்கு வசித்து வரும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளன. மேலும் மழைநீர் வீட்டிற்குள் வருவதால் உடல்நிலை சரியில்லாமல் மற்றும் நோய் தொற்று போன்ற பல்வேறு உடல் உபாதைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
அதிகமான காற்றுடன் மழை பொழிவதால் பல்வேறு இடங்களில் வாகனங்கள் நீரால் அடித்துச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மிக்ஜாம் புயலால் அதிக காற்றுடன் கொண்ட மழை பொழிந்து வருவதால் வேளச்சேரி கியாஸ் நிலையத்தின் அருகே 20 அடியில் திடீரென ஒரு பள்ளம் ஏற்பட்டு உள்ளது.
அதில் வேலை பார்த்துக் கொண்டிருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 10 க்கும் அதிகமான நபர்கள் விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. புயலின் காரணமாக மழை விடிய விடிய காற்றுடன் வெளுத்து வாங்குவதால் சென்னை சர்வதேச விமான நிலையம் காலை 11.40 வரை மூடப்பட்டுள்ளதாகதகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் ரயில் நிலையத்தில் மழை நீரானது அபாய கட்டத்தை மீறி சென்றதால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் புயலால் பேருந்து வசதி குறைவாகவே உள்ளது. பொதுமக்கள் பயணங்களை குறைத்துக் கொள்வது நலம் என எச்சரிக்கப்படுகிறது. மேலும் மிக்ஜாம் புயலின் காரணமாக மின்சாரம், தொலைபேசி, வைஃபை, சிக்னல், போன்றவைகளின் இயக்கம் தடைபட்டுள்ளது.
மேலும்இணையதள சேவைகளும் இயங்காத நிலை ஏற்பட்டு வருகிறது. முக்கியமான அத்தியாவசிய தேவைகள் கூட இல்லாத நிலை ஏற்பட்டு மக்கள் தவித்தும் மழை நீரால் தத்தளித்தும் வருகின்றன. மெரினாவில் மிக்ஜாம் புயலால் மழைநீர் பெருகி கடல் எங்கே? என்று கேட்கும் அளவிற்கு ஆகிவிட்டது.
இதனால் பொதுமக்கள் யாரும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் திருவள்ளூர் மாவட்டத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அளிக்கப்பட்டுள்ளது. அதி தீவிரமாக மாறி மிக்ஜாம் புயலானது கடந்து வருகிறது. இந்த நிலையில் இரவு வரை மற்றும் நாளை காலை வரை கூட மழை பொழிவு இருக்கலாம்.புயல் கடந்து வருவதை பொறுத்து மழைப்பொழிவு இருக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வலியுறுத்தப்படுகிறது.