டிசம்பர் 1ஆம் தேதி அன்று பெய்த கனமழையைத் தொடர்ந்து இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிமலை ஏரியான Toba ஏரிக்கு அருகில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதில் ஒருவர் உயிரிழந்தார் என்றும், 11 பேரை காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
டஜன் கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
கனரக கருவிகளை பயன்படுத்தி மீட்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
சுமார் 350 பேர் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிட்டத்தட்ட 200 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.