சிங்கப்பூரில் டிசம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் பெரும்பாலான நாட்கள் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெரும்பாலும் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் சில நாட்களில் அது இரவு வரை நீடிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளில் சராசரி அளவை விட மழைப் பொலிவு அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
24 டிகிரி செல்சியஸ் முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை பெரும்பாலான நாட்களில் தட்பவெப்பநிலையாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு சில நாட்களில் வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் வரை உயரலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.