தென் கொரியாவில் புதிய கட்டுப்பாடு அறிவிப்பு!!

தென்கொரியாவில் நாய் இறைச்சி உட்கொள்வதற்கு எதிராக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்களில் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.கொரியாவில் நாய் இறைச்சியை உண்பது ஒரு பழமையான நடைமுறையாகும்.

இந்த நடைமுறையை தடை செய்யும் திட்டத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

மேலும் இந்தத் திட்டம் அவர்களது வாழ்வாதாரத்தை அழிக்கும் விதத்தில் இருப்பதாக குற்றம் சாட்டினர்.

ஆனால் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இந்த நடைமுறையை வரவேற்பதாக தெரிவித்தனர்.

பலர் நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர்.

மேலும் நாய் இறைச்சியை உட்கொள்வோரின் எண்ணிக்கை 27 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.