சிங்கப்பூரில் மின் சிகரெட்டை 13 வயது சிறுவனிடம் விற்க முயன்ற 18 வயது இளைஞன்!!கையும் களவுமாக பிடிபட்டான்!!

சிங்கப்பூர் Toa Payoh உள்ள விளையாட்டு மைதானத்தில் 13 வயது சிறுவனுக்கு Vapes எனப்படும் மின் சிகரெட்டை விற்க முயன்ற 18 வயது இளைஞரை நவம்பர் 27ஆம் தேதி அன்று அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

அந்த இளைஞரின் வீட்டை சோதனை செய்ததில் 700க்கும் மேற்பட்ட மின் சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவற்றின் மதிப்பு S$15,000 என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர்கள் கூறினர்.

சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

மேலும் மின் சிகரெட்டுகளை விற்பது மற்றும் இறக்குமதி செய்வது சட்டவிரோதமான செயல் என்று அவர்கள் தெரிவித்தனர்.

முதல் முறை குற்றம் புரிபவராக இருந்தால் ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை,S$10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் தீர்ப்பளிக்கப்படலாம்.