சிங்கப்பூரில் உள்ள Rest Bugis ஹோட்டலில் கடந்த மார்ச் மாதம் நடந்த தாக்குதலில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களில் ஒருவருக்கு மறுசீரமைப்பு பயிற்சி அளிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.கைதுசெய்யப்பட்ட இவர் வாலிபர் என்பதால் இத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வாலிபர் இந்தோனேசியாவை பூர்வீகமாக கொண்டவர்.இவர் 2019 , நவம்பரில் வரம்பற்ற குற்றங்கள் மற்றும் முறையற்ற மோட்டார் வாகனங்கள் ஓட்டுதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால் அடுத்தடுத்த குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால் மறுசீரமைப்பு பயிற்சி அளித்து மீண்டும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இவரை கண்காணிக்கும் விதமாக மின்னனு டேக்கிங் கருவி பொருத்தப்பட்டும் மீண்டும் தனது நண்பர்களுடன் இணைந்து பல்வேறு விவகாரங்களில் ஈடுபட்டும் வந்துள்ளார்.
இதனால் 2022 டிசம்பரில் இவருக்கு அரெஸ்ட் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலைமையில் தனது நண்பர்களில் ஒருவரான Norliana 24 – என்பவருக்கும் 20 வயதுடைய ஒரு வாலிபருக்கும் ஹோட்டல் Rest Bugis வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனை அறிந்த இந்த இளைஞர் மற்றும் அவரது நண்பர் Ghufran உடன் ஹோட்டலுக்கு சென்று Norliana வின் வழிகாட்டுதலின்படி அந்த 20 வயதுடைய வாலிபரையும் அவருடன் இருந்த 19 வயதுடைய பெண்ணையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
மேலும் இதில் ஈடுபட்ட இந்தோனேசிய இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் மார்ச் 27 அன்று கைது செய்பட்டனர்.