ஐய்யயோ!!என்னது!! சாப்பாடு தட்டுல எலியா!!

சிங்கப்பூரின் Orchard ரோட்டில் Fei Siong குழுமத்தால் இயங்கி வரும் Tangs Market உணவங்காடியில் சாப்பாடு தட்டில் எலி இருப்பதை காட்டும் வீடியோ ஒன்று நவம்பர் 27ஆம் தேதி அன்று ஆன்லைனில் வெளியிடப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து சிங்கப்பூர் உணவு நிறுவனம் மற்றும் தேசிய சுற்றுச்சூழல் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் ஆய்வுகள் நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

உணவுத் தட்டில் உள்ள எலி அசைவதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல் தெரியவில்லை.

Tangs Market உணவங்காடியின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இதேபோன்று சுகாதாரக் குறைபாடுகள் காணப்படும் கடைகள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் கூறினர்.