நவம்பர் 26 ஆம் தேதி அன்று இரவு 7:35 மணியளவில் மலேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனத்தை காட்டு யானைகள் தாக்கி சேதப்படுத்தின.
வாகனத்தில் தம்பதி மற்றும் அவர்களது 23 வயது மகன் ஆகியோர் இருந்ததாக கூறப்படுகிறது.
அவர்கள் மூவரும் பினாங்கில் இருந்து தெரெங்கானுவில் உள்ள ஜெர்டிக்கு பயணம் செய்து கொண்டிருந்தனர்.
வாகனத்தை 48 வயதான தந்தை ஓட்டினார்.
வளைவில் திரும்பிய போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த யானைக்கூட்டத்தில் உள்ள ஒரு குட்டியின் மீது அவர் மோதினார்.
கார் மோதியதில் யானைக் குட்டி கீழே விழுந்தது.
இதனால் கோபமடைந்த யானைகள் வாகனத்தை தாக்கின.
யானைக் குட்டி மீண்டும் மேலே எழுந்தவுடன் யானைக் கூட்டம் அங்கிருந்து விலகிச் சென்றது.
காரில் இருந்தவர்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.
நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர்.