சிங்கப்பூரில், 58 வயதான நிலத்தரகர் Tan என்பவர், 80 வயதான மூதாட்டியை ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
அந்த மூதாட்டியின் சொத்தை விற்க Tan உதவியதாக கூறப்படுகிறது.
சொத்து விற்ற பணம் S$462,300ஐ டெபாசிட் செய்ய இருவரும் இணைந்து கூட்டு வங்கிக் கணக்கை தொடங்கினர்.
Tan அந்த மூதாட்டியிடம், அவரை பார்த்துக் கொள்வதாகவும், வங்கி கணக்கில் உள்ள பணத்தை தனது தேவைக்காக எடுத்து பயன்படுத்தப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.
ஆனால், அவர் கூறியதற்கு மாறாக நடந்து கொண்டுள்ளார். மூதாட்டியை ஏமாற்றியுள்ளார்.
Tan, மூதாட்டியின் அனுமதி பெறாமல் இன்டர்நெட் பேங்கிங் மூலம் S$20,000 சிங்கப்பூர் டாலரை தனது சொந்த செலவிற்காக எடுத்துள்ளார்.
இதை அறிந்த மூதாட்டி காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.
விசாரணையில் Tan தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இந்த வழக்கு 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மீண்டும் விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது.