இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள நமது FACEBOOK பக்கத்தில் இணைந்திருங்கள்…
சிங்கப்பூர் வேலைக்கு வருவதற்கு ஏஜென்ட்கள் மூலம் மட்டும் வர முடியும் என்று பலருக்கு தெரியும். ஆனால் அதற்கு இன்னொரு வழியும் உண்டு.
ஏஜென்ட் உதவி இல்லாமல் ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் சிங்கப்பூருக்கு எப்படி வர முடியும் என்பதை பற்றி தெளிவாக காண்போம். சிங்கப்பூர் வருவதற்காக ஒவ்வொருவரும் பல வழியில் முயற்சி செய்து வருகின்றனர்.
சிலர் ஏஜென்ட்களிடம் பணத்தை கட்டி விட்டு காத்திருக்கின்றனர். இன்னும் சிலர் போலி ஏஜென்ட்களிடம் ஏமாந்து விடுகின்றனர்.
சிங்கப்பூர் வருவதற்கு இந்த ஒரு வழி மட்டும் இல்லை. இன்னொரு வழி இணையதள வழியில் வேலை வாய்ப்புகளைத் தேடுவது.
சிங்கப்பூர் வேலை வாய்ப்புகளை இணையத்தில் தேடி அதற்கு விண்ணப்பிக்கலாம்.
ஒரு சிலர் வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பித்த பிறகு தங்களுடைய நிதானம், பொறுமையை இழந்து விடுவார்கள். ஏனென்றால் அதற்கு உடனடியாக பதில் கிடைக்காது.
இதனால் அவர்கள் பொறுமையை இழந்து விடுவார்கள். அதுமட்டுமல்லாமல் பலர் இதனால் ஏமாந்து விடுவோமோ என்று நினைப்பவர்களும் உண்டு.
ஒரு சிலர் சிங்கப்பூருக்கு எப்படியாவது போக வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களுடைய முயற்சிகளைக் கைவிடாமல் தொடர்ந்து முயற்சி செய்வர். இணையத்தில் இருக்கும் அனைத்து சிங்கப்பூர் வேலைகளுக்கும் விண்ணப்பிப்பார்கள்.
அதன் மூலம் ஒரு சிலருக்கு வேலை கிடைக்க வாய்ப்புண்டு எந்த பாஸில் வேலை கிடைத்தது என்பது முக்கியமில்லை.
சிங்கப்பூர் வேலை கிடைப்பதே முக்கியம்.இதிலும் பலர் ஏமாற்றுவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் உங்களிடம் கட்டணம் கட்ட வேண்டும் என்று கூறினால் முன்கூட்டியே பணத்தைக் கட்டி விடாதீர்கள்.
சிங்கப்பூர் வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டிய செயலிகள் (App) பற்றித் தெளிவாக காண்போம்.
▪️JobsDBSG-Jobs in Singapore
▪️JobStreet-Build Your Career
▪️Linkedin Jobs & Business News
▪️All jobs in singapore
▪️Asia Gulf job – Gulf jobs Assignments Abroad jobs
▪️Gulf Walkin – Gulf jobs, Assignment Abroad Jobs
▪️Abroad jobs for Indians
இது போன்ற உள்ளிட்ட செயலிகளில் (App) சிங்கப்பூர் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
சிங்கப்பூர் வேலைக்கு விண்ணப்பிக்கும் இணையத் தளங்கள் (Websites) பற்றித் தெளிவாக காண்போம்.
▪️www.jobcentral.com.sg
▪️www.stjobs.sg
▪️www.monster.com.sg
▪️www.mycareersfuture.sg
▪️www.fastjobs.sg
▪️www.cultjobs.com
சிங்கப்பூர் Registered செயலிகளில் (App) வேலைகளைத் தேட வேண்டும். இந்தியாவில் இருக்கும் Websites வேலைத் தேடினால், அதில் ஒரு சிலர் ஏமாற்றுபவர்கள் இருக்கின்றனர். ஆனால்,சிங்கப்பூர் Registered இணையத்தளங்களில் ஏமாறும் வாய்ப்புகள் குறைவு.
இது போன்ற செயலிகளில் (App) மற்றும் இணையத் தளங்களும் மூலமும் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் சிங்கப்பூருக்கு வரலாம்.ஆனால், இதற்கு உடனடியாக Response கிடைத்து விடாது.
அதற்காக நீங்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும். பொறுமை,நிதானம் இரண்டையும் நீங்கள் இழக்காமல் சிங்கப்பூர் வேலைக்கு தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.
குறிப்பாக, அவர்கள் முன்கூட்டியே IP, Processing Fees என்று கேட்டு கட்டணம் கட்ட சொன்னால் கட்டி விடாதீர்கள். ஏனென்றால், எல்லா இடத்திலையும் ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்.இதிலும் இருப்பார்கள்.
அதனால் முன்கூட்டியே பணத்தைக் ஏமாந்து விடாதீர்கள்.Online மூலம் சிங்கப்பூர் வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் சற்று பொறுமையாக இருக்க வேண்டும். ஏனென்றால் உடனடியாக Response கிடைத்து விடாது.
Response வந்தால் அதற்கான Processing காலதாமதமாக கூட ஆகலாம்.
பொறுமையாக இருங்கள்! நிதானத்தை கடைப்பிடியுங்கள்! சிங்கப்பூருக்கு பாதுகாப்பாக வாருங்கள்!