இணைய வாசிகளின் கவனத்திற்கு!! ஆன்லைனில் விற்கப்படும் தடைசெய்யப்பட்ட 4 பொருட்கள்!!

சிங்கப்பூரில் நவம்பர் 21 அன்று HSA ( சுகாதார அறிவியல் ஆணையம் ) திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டது. அதாவது சிங்கப்பூரில் தடைசெய்யப்பட்ட மூலக்கூறுகளில் ஒன்றான Arsenic வேதிபொருட்களை அதிக அளவில் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சில கிரீம்களும் , உடல் எடை குறைப்பு மாத்திரைகளும் மற்றும் பவுடர்களும் ஆன்லைன் தளங்களில் விற்கப்படுவதாக தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளது.

இந்த பொருட்கள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவின் உள்ளூர் இணையத்தளமான ” Carousell ” என்ற இணையத்தில் பரவலாக விற்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட HSA சோதனையில் , Arsenic மூலக்கூறை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட 4 பொருட்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1.Euzema Confidence Revival Cream

2.HONEY Q Dietary Supplement Product

3.SLIME 7D ADVANCE Slimming Pill

4.FINOs

இந்த 4 தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் ஏற்கனவே இதை பயன்படுத்தும் பொதுமக்கள் அருகில் உள்ள மருத்துவரை அணுகும்படியும் HSA ஆணையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

மேலும் இந்த 3 எடை இழப்பு தயாரிப்புகளை பயன்படுத்தியவர்களில் சிலருக்கு வாந்தி , மயக்கம் மற்றும் அலர்ஜி போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டும் அல்லாது Euzema கிரீமை பயன்படுத்திய 30 வயதுடைய ஆண் ஒருவருக்கு தோல் அரிப்பு மற்றும் கொப்பளங்கள் ஏற்பட்டு உள்ளது.

மேலும் இந்த வருடத்தில் மட்டும் 40% க்கும் மேற்பட்ட Euzema வின் தயாரிப்பு கிரீம்களை HSA தடை செய்துள்ளது.

எனவே விளம்பரங்களில் காட்டப்படும் பொய்யான தகவல்களின் அடிப்படையில் மக்கள் இத்தகைய விபரீதத்தில் சிக்கிக்கொள்ள வேண்டாம்.மேலும் மருத்துவர்களை அணுகாமல் இது போன்ற உடல் எடை குறைப்பு மருந்துகளை உட்கொள்ள வேண்டாம்.