எரிபொருள் விலையில் அதிரடி சரிவு!!! முழு விபரங்களை அறிய உடனே இப்பதிவை வாசியுங்கள்!!

உலக கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகளின் எரிபொருள் பம்ப் விலைகளின் சரிவால் , சிங்கப்பூரில் டீசல் , பெட்ரோல் போன்ற எண்ணெய் விலைகள் குறைந்துள்ளது.

இம்மாதம் , சில ஏற்ற இறக்கங்களை சந்தித்த எரிபொருளின் விலையானது மாதத்தின் இறுதி வாரங்களின் உற்பத்தி நாடுகளில் எரிபொருள் அதிரடி விலை குறைப்பின் காரணமாக தற்போது Caltex எரிபொருள் பம்ப் ஆப்ரேட்டர்களை தவிர மற்ற அனைத்து ஆப்ரேட்டர்களும் தங்களின் எரிபொருள் விலை பட்டியலை சற்று குறைத்துள்ளனர். Esso , Sinopec மற்றும் Shell , SPC போன்ற ஆப்ரேட்டர் நிறுவனங்களின் எரிபொருள் விலை பட்டியல் : ஏற்கனவே ஒரு லிட்டர் டீசல் $ 2.64 முதல் $ 2.70 ஆக இருந்த நிலையில் தற்போது ஒரு லிட்டர் டீசல் விலை $ 2.06 முதல் 2.26 வரை விலை குறைக்கப்பட்டு உள்ளது.

மேலும் ஒரு லிட்டர் பெட்ரோல் ( 92 – Octane) விலை $ 2.79 முதல் $ 2.82 வரை இருந்த நிலையில் தற்போது $ 2.35 முதல் $ 2.40 வரை குறைக்க பட்டுள்ளது. அதனை தொடர்ந்து லிட்டர் ஒன்றிற்கு பெட்ரோல் ( 95 – Octane) $ 2.84 லில் இருந்து $ 2.23 முதல் $ 2.43 வரையிலும் குறைந்துள்ளது.

அதுமட்டுமின்றி 98 Octane பெட்ரோல், லிட்டர் ஒன்றிற்கு $ 3.31 முதல் $ 3.34 வரையில் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது $ 2.60 முதல் 2.84 வரை குறைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 98 பிரீமியம் Octane பெட்ரோல் , லிட்டர் ஒன்றிற்கு $ 3.44 முதல் 3.55 வரை இருந்த நிலையில் தற்போது $ 2.60 முதல் 2.84 வரையிலும் குறைக்கப்பட்டுள்ளது. மேலே கொடுக்கப்பட்ட இந்த விலைப்பட்டியல் , சிங்கப்பூர் நுகர்வோர் சங்கத்தின் பம்ப் விலை கண்காணிப்பாளர் Fuel Kaki அவர்களின் மூலம் வெளிவந்த தகவலின் பேரில் கொடுக்கப்பட்டுள்ளது.