சமீபத்திய வாரங்களில் பெய்த கனமழையைத் தொடர்ந்து கென்யாவின் பல்வேறு பகுதிகளில் 46 பேர் உட்பட டஜன் கணக்கானோர் உயிரிழந்தனர்.
நாடு முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு கென்யாவின் துணை ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
நிலச்சரிவு ஏற்பட்டதன் விளைவாக சரக்கு ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக கென்யா ரயில்வே தெரிவித்துள்ளது.
கென்யா, சோமாலியா மற்றும் எத்தியோப்பியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
உயிரிழந்த நூற்றுக்கணக்கானவர்களில் 16 குழந்தைகளும் அடங்குவர்.
இப்பகுதிகளில் உள்ள 700,000 க்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.