UOB மற்றும் OCBC – இல் வங்கி கணக்கு வைத்து இருப்பவர்களா நீங்கள் ?? அல்லது Liquid Group மற்றும் Maybank Singapore வாடிக்கையாளரா நீங்கள்?? அப்படி என்றால் இதோ உங்களுக்கான ஒரு இன்ப அதிர்ச்சி!!!

சிங்கப்பூரில் , கடந்த நவம்பர் 17 அன்று நடைபெற்ற Fintech Festival விழாவில் இந்தோனேஷியா மற்றும் மலேசியா நாடுகளுடனான ஆன்லைன் நிதி பரிவர்த்தனையை எளிதாக்கும் வகையில் இரண்டு புதிய சேவைகள் சிங்கப்பூர் நாணய ஆணையம் (MAS) இன் இயக்குனர் Ravi Menon மற்றும் இந்தோனேஷியா வங்கி கவர்னர் Perry Warjio ஆகியோரின் முன்னிலையில் தொடங்கப்பட்டது.

சிங்கப்பூர் மற்றும் மலேசியாவின் பண பரிவர்த்தனை தளங்களான முறையே Paynow மற்றும் Duitnow தளங்களை இணைப்பதன் மூலம் இத்தகைய நாடுகளுக்கு இடையேயான நிதி பரிவர்த்தனை பரிமாற்றங்கள் எளிதாக்குவதை நோக்கமாக கொண்டிருந்தது அந்த சேவை.

இந்த வசதியை UOB மற்றும் OCBC வங்கியில் அக்கவுண்ட் வைத்து இருப்பவர்களும் Liquid group மற்றும் Maybank Singapore வாடிக்கையாளர்களும் மட்டுமே தற்போது பெற இயலும்.மேலும் DBS வங்கி வாடிக்கையாளர்களும் விரைவில் இச்சேவையை பெற்று பயனடைவார்கள்.

மேலும் நீங்கள் தற்போது பயன்படுத்தும் ஆன்லைன் பண பரிவர்த்தனை App – களை பயன்படுத்தி இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் , மலேசியா வணிகர்களின் QRIS ( விரைவு பதில் குறியீடு இந்தோனேசியா தரநிலை) மற்றும் Net- QR களை பயன்படுத்தி மிகவும் எளிதான முறையில் ஆன்லைன் பண மாற்றத்தை செய்யலாம்.

நம் அன்றாட வாழ்வில் ஆன்லைன் பண பரிமாற்றம் என்பது அதிகளவில் மக்களால் பயன்படுத்த கூடியவை.எனவே இத்தகைய சேவையானது இந்தோனேசியா மற்றும் மலேசியா நாடுகளுடனான நிதி பரிவர்த்தனை முறையை எளிதாக்குவது மட்டுமின்றி சிங்கப்பூரில் மற்றும் இந்தோனேஷியா உள்ள சிறுதொழில் வணிகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.