சீனாவின் Shanxi மாகாணத்தில் உள்ள நான்கு மாடி கட்டிடம் ஒன்றில் நவம்பர் 16-ஆம் தேதி (நேற்று) காலை 6:50 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.மருத்துவமனைக்கு டஜன் கணக்கானோர் கொண்டு செல்லப்பட்டனர் என்று மாநில ஊடகங்கள் தெரிவித்தது.
இந்த கட்டிடம் Yongju நிலக்கரி நிறுவனத்திற்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.
இந்த கட்டிடத்திலிருந்து 63 பேர் வெளியேற்றப்பட்டனர். அவர்களில் 51 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தீ கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாகவும் தெரிவித்தன.
தீப்பிடித்ததற்கான காரணம் தெரியவில்லை என்றும், அது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தது.
பாதுகாப்பு தரமின்மை காரணமாக சீனாவில் தொழில்துறை விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன.