சிங்கப்பூரின் லக்கி பிளாசாவில் உள்ள அடகு கடையிலிருந்து 132,000 சிங்கப்பூர் டாலர் மதிப்புடைய 3 carat வைர மோதிரத்தை திருடிய சீனாவைச் சேர்ந்த லூ என்ற நபருக்கு 2 ஆண்டு 8 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
49 வயதான Lu Jingnan என்பவர் அவரது கூட்டாளிகளான Luo Yi மற்றும் He Yuanlin ஆகியோருடன் இணைந்து வைர மோதிரத்தை திருட திட்டமிட்டார்.
Lu, ஜூலை 12ஆம் தேதி அன்று லக்கி பிளாசாவில் உள்ள ValueMax அடகு கடைக்கு சென்று அங்குள்ள வைர மோதிரங்களை பற்றி விசாரித்தார்.
ஜூலை 16ஆம் தேதி அன்று மூவரும் அடகு கடைக்கு சென்றனர்.Lu மற்றும் Luo இருவரும் கடைக்குள் சென்றனர். He வெளியே நின்று கொண்டு இருந்தார்.
Lu, பெண் ஊழியரிடம் வைர மோதிரங்களை விசாரித்துக் கொண்டிருந்தபோது Luo அந்த கடையின் ஆண் ஊழியரை திசைதிருப்ப முயன்றார்.
மூன்று carat வைர மோதிரத்தை பற்றி விசாரித்த Lu, சிறிய வைர மோதிரத்தை பற்றியும் விசாரித்தார்.
பெண் ஊழியர், சிறிய மோதிரங்களை தேடி எடுக்க முயற்சித்த போது, Lu அவரிடம் இருந்த மூன்று carat வைர மோதிரத்தை யாருக்கும் தெரியாமல் அவரது பாக்கெட்டில் வைத்தார்.
அவர் சிறிய வைர மோதிரத்தை வாங்க முடிவு செய்வதாக அந்த பெண் ஊழியரிடம் கூறினார்.
அந்த பெண் ஊழியர் விலையை சரிபார்க்க உள்ளே சென்றபோது அவர்கள் மூவரும் அந்த இடத்தை விட்டு வெளியேறினர்.
இவர்களின் செயல் அந்த கடையில் இருந்த சிசிடிவியில் பதிவானது.பிறகு Lu மற்றும் He மலேசியாவிற்கு சென்றனர். இருவரும் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
மூவரில், Lu என்பவர் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார்.