கந்த சஷ்டி விரதத்தில் செய்யக்கூடாத தவறுகள்!!

கந்த சஷ்டி விரதம் 2023′சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்பது பழமொழி

இதன் உண்மையான பொருள்:சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும்.குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகச் சிறந்த விரதம் ஆகும்.

கந்த சஷ்டி என்பது:முருகக்கடவுள் சூரனை அளித்த ஒரு விழாவாகம் சஷ்டி என்பது ஆறு ஆகும்.

விரதம் துவங்கும் நாள்:நவம்பர் 13-ஆம் தேதி ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை முதல் ஆறு நாட்கள் ஆகும்.

விரதம் தரும் பலன்கள்: கந்த சஷ்டி விரதம் ஆறு நாட்கள் இருந்து முருகனை வழிபட்டால் குழந்தை பாக்கியம் தீராத நோய்கள் தீரும்.திருமணம் கைகூடி வரும்.

செய்ய வேண்டியவை: காலை,மாலை இரண்டு வேளையும் நீராடி கந்த சஷ்டி கவசம் படித்து முருகனை வழிபடுதல்.அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று வருதல். ஒருவேளை மட்டும் உணவினை எடுத்துக் கொள்ளுதல்.ஒருவேளை உணவானது பால்,பழம்,கீரை போன்றவற்றைகளை எடுத்துக் கொள்ளுதல்.எச்சில் செய்யாத உணவினை தானம் செய்தல்.மனம் உருகி முருகனை வணங்கினால் நல்ல பலன்களை பெறலாம்.

செய்யக்கூடாதவை:அசைவ உணவு சாப்பிடக்கூடாது மது புகை கூடாது கோவப்படுதல் கூடாது.இரவு தரையில் கம்பளம் விரித்து தூங்க வேண்டும். காலணிகள் தவிர்ப்பது நல்லது.

இதுபோன்ற முறையில் கந்த சஷ்டி விரதம் இருந்து முருகனை வழிபட்டால் நிச்சயம் நல்ல பலன்கள் கைகூடி வரும் வெற்றி நமக்கே…