எப்போது நாம் மீட்கப்படுவோம் என்று காத்திருக்கும் 40 உயிர்கள்!! நான்கு நாட்களுக்கு மேலாக சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் பரிதாபம்!!

இந்தியாவின் வட மாநிலமான உத்தரகாண்டில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கட்டுமானத்தில் இருந்த சுரங்கப்பாதை இடிந்து விழுந்தது விபத்துக்குள்ளானது.

இதில் 40 கட்டுமானத் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.

நான்கு நாட்களுக்கும் மேலாக இடிந்து விழுந்த சுரங்கப்பாதையில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை மீட்கும் பணியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இடிபாடுகளை அகற்றுவதில் பல சிக்கல்கள் இருப்பதால் மீட்புப் பணி தாமதமாகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

சுரங்கப்பாதையில் சிக்கி உள்ள தொழிலாளர்களை தொடர்பு கொண்டதில் அவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அவர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவற்றை குழாய் மூலம் அனுப்பி வருகின்றனர்.

இதுவரை மணிக்கு ஒரு கிலோ மீட்டர் வேகத்தில் துளையிடும் இயந்திரங்களை பயன்படுத்தி வந்தனர்.

தற்போது மணிக்கு 2.5 கிலோமீட்டர் வேகத்தில் துளையிடும் கனரக இயந்திரங்களை பயன்படுத்தும் முயற்சியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபடபோவதாகவும் கூறப்பட்டது.

இதன்மூலம் சுரங்கப்பாதையில் சிக்கி உள்ள தொழிலாளர்களை விரைவில் மீட்க முடியும் என்று நம்பப்படுகிறது.