ஆஸ்திரேலியாவின் ஹில்டன் நிறுவனம், வேலை தேடுபவர்கள் தங்களது விண்ணப்பத்தை TikTokல் வீடியோவாக பதிவேற்றும்படி கேட்டுக் கொண்டது.
இந்த நிறுவனம் அதன் TikTok பக்கத்தில் 34 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டது.
அந்த வீடியோவில், வேலை வாய்ப்புகள் குறித்து தங்களது இணையதளத்தில் தேடுமாறு மக்களை கேட்டுக் கொண்டது.
இந்த நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒரு நிமிடம் அல்லது அதற்கும் குறைவான வீடியோ ஒன்றை எடுக்க வேண்டும்
நிறுவனம் வெளியிட்ட வீடியோவில், “ஹில்டன் விருந்தினர்களின் நாளை எவ்வாறு சிறப்பாக்குவீர்கள் என்பதை குறிப்பிட வேண்டும்” என்று கூறியது.
பிறகு அந்த வீடியோவை அனைவரும் பார்க்கும் வகையில் அவர்களின் TikTok பக்கத்தில் பதிவிட வேண்டும்.
மேலும் இந்த பதிவை பதிவிடும் போது @hiremehiltonau அக்கவுண்ட்டை tag செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டது.விண்ணப்பிப்பவர்களின் டிக்டாக் ரெஸ்யூமையும் அவர்களின் உற்சாகத்தை காண்பதற்கு ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பதாக கூறியது.
வீடியோ மூலம் விண்ணப்பிக்க முடியாதவர்கள், பயோடேட்டாவை எழுத்து வடிவமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று நிறுவனம் கூறியது.