இந்தியா VS நியூசிலாந்து : நேற்று நவம்பர் 15 , இந்தியா VS நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2023 கிரிக்கெட் உலக கோப்பையின் முதல் அரையிறுதி போட்டியானது மும்பையில் உள்ள வான்கடோ மைதானத்தில் நடைபெற்றது. ஆட்டத்தின் டாஸை ரோஹித் ஷர்மா வின் தலைமையிலான இந்திய அணி வென்றது.
முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணியானது , கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் ஹீப்மான் பார்ட்னர்ஷிப் முறையில் தனது ஆட்டத்தை தொடங்கியது. ஆரம்ப ஆட்டமானது அமர்க்கலமாக தொடங்கப்பட்டாலும் 29 பந்துகளில் 47 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தை இழந்தார் ரோஹித் ஷர்மா.
மேலும் ஹீப்மான் தசைபிடிப்பின் காரணமாக 79 ரன்களில் வெளியேறினார். பின் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி ஆட்டத்தை தன்வசப்படுத்தினார்.
அதிரடியான ஆட்டதால் அரங்கத்தை அதிர செய்தார் விராட் கோலி.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 50 சதங்கள் எடுத்த முதல் வீரர் என்ற அரியாசனத்தில் அமர்ந்தார் கிங் கோலி.அதுமட்டும் இன்றி கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை முறியடித்த முதல் இந்திய வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார்.
கிரிக்கெட்டில் பெரும்புள்ளிகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்து வரலாற்று சாதனையை படைத்த விராட் கோலி மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்து உள்ளார். அதன் பின் தனது 117 ரன்களில் ஆட்டமிழந்தார்.இருப்பினும் இந்திய அணியின் அபார ஆட்டத்தின் வாயிலாக 397 ரன்கள் மற்றும் 4 விக்கெட் வீதம் எதிரணிக்கு 398 ரன்களை இலக்காக வைத்தது.
” ஒன்றுக்கொன்று சலித்தது இல்லை ” என்பதற்கு இணங்க நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் மற்றும் டேரிலி மிட்செல் ஜோடியில் ஆட்டமானது இந்திய அணியின் ரசிகர்களை சற்று பயத்தில் ஆழ்த்தியது. இந்த ஜோடியானது 87 பால்களில் 102 ரன்களை எடுத்து ஆட்டத்தை விறுவிறுப்பாக்கினார்கள்.
அதனை தொடர்ந்து கேன் அரை சதமும் , மிட்செல் சதத்தையும் விலாசினர்.” கொஞ்சம் விட்டு புடிப்போம் , ஆட்டத்துல கொஞ்சம் கிக்கு வேணும்ல!! என்பது போல இந்திய அணியானது எதிரணிக்கு வாய்ப்புகளை வழங்கியது. பின் பந்தினை தனது கைகளில் எடுத்தார் ஷமி.ஆட்டத்தை ஆரம்பிப்போமா!! என்று தனது ஒரு ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒரே நாளில் விராட் கோலியின் உலக சாதனையை அடுத்து இந்திய அணிக்கு மீண்டும் ஒரு வரலாற்று சாதனையாளராக , 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்று சாதனையை படைத்தார் ஷமி. அதுமட்டும் இன்றி அதிக முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மற்றும் ஒரு சாதனையை படைத்தார்.
மேலும் தனது 9.5 ஓவர்களிலேயே 7 விக்கெட்டுகளை எடுத்து நியூசிலாந்து அணியை அலறவிட்டு ஆட்ட நாயகனாக திகழ்ந்தார்.
ஆட்டத்தின் இறுதியாக NZ 327 ரன்களில் 10 விக்கெட் இழப்பால் 48.5 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி வெற்றியை இழந்தது. வெற்றி என்பதற்கு மறுப்பெயர் இந்திய அணி என்பது போல நடப்பு ஆண்டின் உலககோப்பை கிரிக்கெட் தொடரில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி தனது 10 வது வெற்றியையும் எட்டியது.
மேலும் 2023 கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் இறுதிபோட்டிக்கு முன்னேறிய முதல் அணி , இந்திய அணி என்பதில் பெருமிதம் கொள்கிறார்கள் இந்திய அணியின் ரசிகர்கள். அதோடு இந்த ஆண்டின் உலககோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் மற்றும் விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் விராட் கோலி (711 – Run) மற்றும் முகமது ஷமி (23 – விக்கெட் ) முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. “கப் முக்கியம் பிகுலு ” என்று சமூக வலைத்தளத்தில் இந்திய அணியை #tag செய்து ஆரவாரத்தில் உள்ளனர் ரசிகர்கள்.