கொரிய மொழியில் இயங்கிவந்த 38 போலியான செய்தி இணையத்தளங்களை தென்கொரியாவின் உளவு நிறுவனம் கண்டுபிடித்ததாக தெரிவித்தது.
மேலும் இந்த இணையத்தளங்கள் சீன நிறுவனங்களால் இயக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் இந்த செய்தி இணையத்தளங்கள் சீனாவிற்கு ஆதரவாகவும், அமெரிக்காவிற்கு எதிரான மக்கள் கருத்தை பெறுவதற்காகவும் இயக்கப்படுவதாக கூறியது.
இந்த நிறுவனங்கள் தங்களை கொரியாவின் டிஜிட்டல் செய்தி சங்கத்தின் உறுப்பினர்களாக காட்டிக் கொள்ளும் பொருட்டு, உள்ளூர் செய்தி நிறுவனங்களின் அனுமதி இல்லாமல் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய புலனாய்வு சேவை, மற்ற அரசு நிறுவனங்களுடன் சேர்ந்து இந்த போலியான செய்தி இணையத்தளங்களை மூடுவதாக தெரிவித்தது.