நேற்று நவம்பர் 14 , சாங்கி விமான நிலையத்தின் டெர்மினல் : 3 , மதியம் 12 மணிக்கு மேல் தற்காலிகமாக சில மணிநேரம் மூடப்பட்டது.இதன் காரணமாக அங்கு இயக்கப்பட்ட 74 விமானங்களும் சற்று காலதாமதமாக இயக்கப்பட்டது.
இந்த கால தாமதத்திற்கான காரணம், சிங்கப்பூர் குடியரசு விமானப் படை (RSAF) – இன் F 16 விமானம் இங்கு தரையிறக்கப்பட்டது என சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் ( CAAS) செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்து உள்ளது.
F16 விமானம் மதியம் 12 மணியளவில் இங்கு தரையிறக்கப் பட்டதாகவும் , 1.20 க்குள் செயல் இழந்த விமானம் இழுத்து செல்லப்பட்டதாகவும் மேலும் கூறியுள்ளது .
RSAF – இன் F16 விமானத்தில் ஏற்பட்ட கோளாறுகளின் அடிப்படையில் Changi விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
மேலும் தரை இறக்கப்பட்ட சிறிது நேரத்திலையே F16 ன் டயர் வெடித்துள்ளது .இருப்பினும் இதில் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை எனவும் RSAF தரப்பிலும் கூறப்பட்டுள்ளது.