உண்மையும்..!! பின்னணியும்..!! சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) விமானப் பணிப் பெண் ஜப்பானில் கைதுசெய்யப்பட்டதின் காரணம் என்ன??

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) விமானப் பணிப் பெண் (33) , ஜப்பானில் உள்ள Narita பகுதியில் அமைந்திருக்கும் கடை ஒன்றில் நவம்பர் 6 அன்று திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக கைதுசெய்யப்பட்டு உள்ளார். மேலும் அவர் திருடியதாக கூறப்படும் பொருட்களின் மதிப்பு சுமார் US$ 66 என்றும் கடையின் உரிமையாளர் புகாரளித்துள்ளார்.

அதோடு அந்த பெண்னை தடுக்க முயன்ற ஒரு நபரின் கைகளை கடித்து தப்பிக்க முயன்றதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டதின் அடிப்படையில் அவர் ஜப்பான் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், குற்றம்சாட்டப்பட்ட அந்த பெண் ” நான் பொருட்களை திருடவில்லை என்றும் அதற்கான பணத்தை தவணை முறையில் திருப்பி தருவதன் அடிப்படையிலே பொருட்களை எடுத்ததாகவும் கூறியுள்ளார்”.

மேலும் தன்னை தாக்க வந்த நபரிடம் இருந்து தற்காத்து கொள்ளவே அவரின் கைகளை காயப்படுத்தியதாகவும் கூறியுள்ளார். இந்த செய்தியினை பற்றிய முழுதகவல்களை பெரும் நோக்கத்தோடு சிங்கப்பூர் செய்தி நிறுவனங்கள் SIA விமான நிறுவனத்தை அணுகியது.

SIA விமான பணிப் பெண் ஒருவர் ஜப்பனில் கைது செய்யப்பட்டது உண்மை எனவும் விசாரணை நடந்து கொண்டிருப்பதால் கூடுதல் விபரங்களை தர இயலாது எனவும் கூறியுள்ளது SIA நிறுவனம் இன்று நவம்பர் 14 நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளது.