மங்கோலியாவைச் சேர்ந்த 28 வயதான Altantuya Shaariibuu என்ற பெண்ணை கொலை செய்த Sirul Azhar Umar என்ற காவல்துறை அதிகாரி, சுமார் 9 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
தற்போது அவர் விடுவிக்கப்பட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
2006 ஆம் ஆண்டு இவரும், மற்றொரு காவல் துறை அதிகாரியான Azilah Hadri என்பவரும் Altantuya-வை கொலை செய்தனர். இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
தீர்ப்பளிக்கப்படுவதற்கு முன்பு Sirul ஆஸ்திரேலியாவிற்கு தப்பிச் சென்றார்.2015 ஆம் ஆண்டிலிருந்து இவர் அங்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
சமீபத்தில் புகலிடம் தேடி வருபவர்களை காலவரையின்றி தடுப்புக் காவலில் வைப்பதற்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து இவரோடு சேர்த்து பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவரை மலேசியாவிற்கு அனுப்பிவைப்பது குறித்து கலந்துரையாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் Altantuya-வை கொல்ல உத்தரவிட்டது யார் என்பது பற்றிய தகவல் இன்னும் தெரியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.