சிங்கப்பூரில் உள்ள River wonders பூங்கா பார்வையாளர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி!!! பிறந்த நாட்டிற்கும் வீட்டிற்கும் Bye!! Bye!! சொல்லிவிட்டு சீன நாட்டிற்கு புறப்பட தயாரான சிங்கப்பூரின் முதல் ராட்சஷ பாண்டா குட்டி “Le Le ” ஜனவரி 16 , 2024 வரையிலும் சிங்கப்பூரில் இருக்கும் என Mandai வனவிலங்கு குழு தெரிவித்துள்ளது.
நவம்பர் மாத இறுதிக்குள் சிங்கப்பூரில் இருந்து இரண்டு வயதான Le Le சீனா செல்லவுள்ளதாக இருந்தது.மேலும் நவம்பர் 20 அன்று இந்த குட்டி பாண்டாவிற்கு பிரியவிடை நிகழ்ச்சியும் ஏற்படுத்தி இருந்தது Mandai வனவிலங்கு குழு.
இருப்பினும் இந்த குட்டி பாண்டாவின் பயணம் குறித்தும் உடல் மற்றும் மனரீதியான சவால்களை எதிர்கொள்வது குறித்தும் ஏற்பாடுகள் செய்து வருவதாக கூறியுள்ளனர்.
எனவே பாண்டாவின் பயணம் சற்று தாமதமாக நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.இந்த பாண்டா குட்டி river wonders பூங்காவில் பொதுமக்களின் பார்வைக்காக டிசம்பர் 13 வரையிலும் விடப்படும்.
அதன் பின் இந்த பாண்டா குட்டி , Mandai வனவிலங்கு மற்றும் China Wildlife Conservation Association ஆகியவையின் ஒப்பந்தத்தின் படி , சீன நாட்டிற்கு சென்று தன் இன மேம்பாட்டிற்கு வழிவகை செய்யும். அதுவரையிலும் பாண்டாவின் பாதுகாப்பு குழுவால் பாண்டாவிற்கு தேவையான மருத்துவ வசதி , இருக்கை பெட்டி போன்றவற்றை உறுதி செய்யும் எனவும் கூறியுள்ளது.
மேலும் பார்வையாளர்கள் Le Le யை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் கண்டுகளிக்கலாம் எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.எனவே பூங்கா பார்வையாளர்களே நமது குட்டி Le Le க்கு Goodbye சொல்ல தயாராகுங்கள்.