Marine Terrace சந்தையில் ஏற்பட்ட திடீர் பதற்றம்!!! தேசிய பூங்கா வாரியம் ( Npark) – இன் அதிரடி நடவடிக்கை!!!

நேற்று (நவம்பர் 12 ) சிங்கப்பூரில் Marine Terrace சந்தை பகுதியில் காலை 11 மணியளவில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகளை காகங்கள் தாக்கியுள்ளது.

இது அங்கு வசிப்பவர்களுக்கும் கடை உரிமையாளருக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.மேலும் இது போன்ற காக்கைகளின் தாக்குதல் அதிகமாக நடக்கிறதாக பதிவாகி உள்ளது.

Ariffah Ja’afer என்பவர் தனது 5 குழந்தைகளுடன் சந்தையில் பொருட்கள் வாங்க வந்துள்ளார்.மேலும் இவரின் மூன்று குழந்தைகள் 50A மற்றும் பிளாக் 59 க்கும் இடையே உள்ள திறந்தைவெளி மைதானத்தில் விளையாடி கொண்டிருந்ததாக Ariffah கூறினார்.

அப்போது அங்கு வந்த சில காக்கைகள் திடீர் என்று தனது குழந்தைகளின் தலைகளை குறிவைத்து தாக்கியதாகவும் கூறியுள்ளார்.மேலும் அவரின் 15 மாதங்கள் நிரம்பிய ஆண் குழந்தையை காகங்கள் தனது அலகால் கொத்துவதற்கு முயற்சித்து உள்ளது. இதனால் பதற்றமடைந்த Ariffah தனது குழந்தைகளை பத்திரமாக காப்பாற்றியுள்ளார்.

மேலும் அங்கு 50A மற்றும் 59 ப்ளாக்குகளுக்கு இடையேயும்,51 மற்றும் பிளாக் 52 இல் உள்ள கார் பார்கிங்கிலும் காகங்கள் இருப்பதை காணலாம் என்றும் கூறியுள்ளனர்.

இந்த தொடர்ச்சியான காக்கைகளின் தாக்குதலால் தேசிய பூங்கா வாரியம் (Npark) அப்பகுதியில் உள்ள காக்கைகளின் கூடுகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.