சிங்கப்பூரில் புதிய நாணயம் வெளியீடு!! என்னவா இருக்கும்?

சிங்கப்பூர் நாணய ஆணையத்தால் வரும் (2024) ஆண்டிற்கான “டிராகன் நாணயம்” வெளியிடப்பட்டது.

சிங்கப்பூரின் நான்காவது சீன பஞ்சாங்க நாணயத் தொடரின் படி , இந்த டிராகன் நாணயத்துடன் 10 நாணயங்கள் வெளியிடப்படும் என்று தெரிவித்தது.நவம்பர் 9-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று இது குறித்து வெளியிட்டது.

வெவ்வேறு உலோகக்கலவையில் உருவாக்கப்பட்ட தனித்தனியான முக அமைப்புகளுடனும் , வடிவங்களிலும் 10 மாறுபட்ட டிராகன் நாணயங்கள் MAS – ஆல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நாணயங்களில் சிங்கப்பூரின் இயற்கை வளங்கள் மற்றும் வளமிக்க இடங்களை பெருமைப்படுத்தும் விதமாக டிராகன் உருவ படங்களோடு உருவாக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த நாணயங்கள் ” கார்டன்ஸ் பை தி பே” என்று அழைக்கப்படுகிறது.

இந்த நாணயங்கள் பெற விரும்புவோர் வரும் டிசம்பர் 10 வரையில் சிங்கப்பூர் Mint’s வலைத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.மேலும் இந்த நாணயங்கள் 2024 ஜனவரி 1 இல் இருந்து பொதுமக்களின் புழக்கத்திற்கு வரும்.

வெளியிடப்பட்ட நாணயங்களில் 2024 என்ற ஆண்டும் சிங்கப்பூர் Coat of Arms ” குறியீடும் பொறிக்கப்பட்டிருக்கும் என்றும் வெவ்வேறு வடிவிலான டிராகன் உருவங்களும் இடம் பெற்று இருக்கும் எனவும் கூறியுள்ளது MAS ஆணையம்.