ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இருந்து 1220 கிமீ தொலைவில் அமைந்துள்ள Iwo Jima-வின் கடற்கரையிலிருந்து ஒரு கிமீ தொலைவில் ஒரு புதிய தீவு உருவாகியுள்ளது.
இந்த தீவின் விட்டம் 100 மீ . இது கடலில் இருந்து 20 மீ உயரம் கொண்டது என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
கடந்த மாதம் கடலுக்கு அடியில் எரிமலை தொடர்ந்து வெடித்ததன் எதிரொலியாக இந்த தீவு உருவாகியுள்ளது. நீண்ட காலம் அது நீடிக்காது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இது போன்ற புதிய தீவுகள் உருவாவதும், மறைவதும் ஜப்பானில் வழக்கமாக நடைபெறும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
மேலும் இந்த புதிய தீவின் வளர்ச்சியை ஆய்வு செய்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.