சிங்கப்பூரில் ஒன்பது வயது நிரம்பிய சிறுவன் ஒருவன் தனது நண்பனின் பிறந்தநாள் விழாவிற்கு அவனுடைய தாயுடன் கடந்த ஆண்டு நவம்பர் 30 அன்று சென்றுள்ளான்.
பிறந்தநாள் கொண்டாட்டத்தின் முடிவில் இச்சிறுவன் தனது நண்பன் S$ 50 டாலர்களை கொடுத்ததாக தாயிடம் கூறியுள்ளான். ஆனால் அவனின் செயலில் சந்தேகம் ஏற்பட்டதால் அந்த பணத்தை திருப்பி கொடுக்கும்படி தாய் அறிவுறுத்தி உள்ளார். சிறுவனும் திருப்பி கொடுத்துவிட்டதாக தாயிடம் கூறியுள்ளான்.
நடந்ததை தனது கணவரிடம் கூறியுள்ளார் அந்த பெண். இதனால் ஆத்திரமடைந்த சிறுவனின் தந்தை தனது கைத்தடியால் கொடூரமாக தாக்கியுள்ளார்.மேலும் குடை கம்பி போன்றவற்றால் பலமாக தாக்கி இருக்கிறார்.இதனைத் தடுக்க முயற்சித்த தனது மனைவியையும் தாக்கியுள்ளார்.
இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு அழைப்பு விடுத்தனர்.பின்னர் சிறுவன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.போலீஸாரால் குற்றவாளியான தந்தை கைதுசெய்யப்பட்டார்.
மேலும் செய்த தவறை ஒப்புக்கொண்டுள்ளார்.
சிறுவனுக்கு நற்பண்புகளை கற்றுக்கொடுப்பதின் அடிப்படையிலே இவ்வாறு செய்ததாகவும் மேலும் தனது கோபத்தை கட்டுப்படுத்த முடியாத பட்சத்தில் இவ்வாறு தவறிழைத்ததாகவும் தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளார்.அவர் செய்த செய்த குற்றத்திற்காக ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.