நவம்பர் 6ஆம் தேதி அன்று டோக்கியோவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் British rock band Coldplay-ன் முன்னணி பாடகரான Chris Martin என்பவர் கணவரை இழந்த தன் ரசிகர் ஒருவருக்காக ஒரு பாடலை பாடினார்.
அவரின் இந்த செயல் பலரின் மனதை நெகிழ வைத்தது.
அவர் பாடிக்கொண்டிருந்த போது அவரது ரசிகர்கள் இருவர், கையில் ஒரு செய்தி பலகையை ஏந்திக் கொண்டிருப்பதைக் கண்டார்.
அந்த ரசிகர்கள் இருவரும் தாய், மகன் ஆவர்.
மார்டின் அவர்களை மேடைக்கு அழைத்தார்.
அந்த பலகையில், உயிரிழந்த தனது கணவருக்காக ‘Everglow’ பாடலைப் பாட முடியுமா என்று எழுதப்பட்டிருந்தது.
அந்த ரசிகரின் விருப்பத்தை Coldplay இசைக்குழு நிறைவேற்றியது.
இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை கண்டு பலரும் கண்ணீர் மல்க இந்த இசைக் குழுவினரை பாராட்டினர்.பலர் மனம் நெகிழ்ந்தனர்.
இன்னும் பலர் பிரிந்த தங்கள் அன்புக்குரியவர்களை நினைவு கூர்ந்ததாக தெரிவித்தனர்.