இதுக்கெல்லாமா கோர்ட்டு..வக்கீல்னு போவாங்க?? இப்படி நம்மை சற்று சிந்திக்க வைக்கும் சில சுவாரசியமான நிகழ்வுகளை இப்பதிவில் காண்போம்.
நம் அன்றாட வாழ்வில் எத்தனையோ இன்னல்களை சந்தித்து வருவதுண்டு.அதை எவ்வாறு சரிச் செய்வது , மேலும் பிரச்சனையை வளரவிடாமல் எப்படி சூசகமாக முடிப்பது என்றெல்லாம் சிந்திப்பதும் உண்டு.இதுவே மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும் , நம்மை சார்ந்து இருப்போருக்கும் நன்மை பயக்கும்.
ஆனால் இன்னும் சிலர் , சிறிய பிரச்சனையை கூட பெரிய அளவில் கொண்டுவந்து முடிப்பார்கள்.அப்படி சில வித்தியாசமான வழக்குகளை மும்பையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார்.
அதில் சிலவற்றை காண்போம். திருமணமான ஒரு தம்பதி இன்ப சுற்றுலா சென்றிருக்கும் போது , தனது மனைவி முறையான உடையை அணிந்து வரவில்லை என்று கணவர் வழக்கு தொடுத்துள்ளார்.
இது போகட்டும்னு பார்த்தா , அடுத்து ஒரு தம்பதி கணவன் தன்னிடம் சண்டைகளே போடுவதில்லை எனவும் அளவுக்கு மீறிய அன்பு செலுத்துவதாகவும் புகார் செய்துள்ளார்.
மேலும் ஒரு தம்பதி, தன்னுடைய கணவர் UPSC தேர்வு எழுதவுள்ளதால் எப்போதும் படித்து கொண்டே இருப்பதாகவும் , தனக்காக நேரம் செலவிடுவதில்லை எனவும் கூறியுள்ளார்.
பாசம் வைப்பதும் தவறு, பாசம் வைக்கா விட்டாலும் தவறு!! என்னம்மா நீங்க இப்படி பண்றிங்களே மா?? இப்படி தான் பல கணவர்களின் நிலைமை திண்டாட்டமா இருக்கும் போல!!
இப்படி சின்ன சின்ன விஷயங்களுக்கு கோர்ட் , வக்கீல்னு போறவங்க மத்தியில் பிரச்சனைகளை கூட தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
உதாரணமாக, போக்குவரத்து நெரிசலில் இருக்கும் ஒருவர் , இன்னும் சில மணி நேரங்களுக்கு இந்த போக்குவரத்து நெரிசல் சரி ஆகாது என்று எண்ணி இந்த நேரத்தை பயனுள்ளதாக மாற்றும் வகையில் Zomato – வில் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டு உள்ளார்.
உணவு டெலிவரி ஆகும் வரையிலும் அவர் அதே போக்குவரத்து நெரிசலில் சிக்கி இருப்பது குறிப்பிடத் தக்கது.
இதே போன்று ஒரு பெண்ணும் போக்குவரத்து நெரிசலில் இருந்துக்கொண்டே தனது காரில் இருந்தபடி சமைப்பதற்கு தேவையான பச்சை பட்டணிகளை சுத்தம் செய்து முடித்துள்ளார்.