இதைப் படிக்காவிட்டால் இழப்பு உங்களுக்கே!! தெரிந்துக்கொள்ளவோம்!! படித்ததை மற்றவருக்கு பகிர்ந்து கொள்ளவோம்!!

இதைப் படிக்காவிட்டால் இழப்பு உங்களுக்கே!! தெரிந்துக்கொள்ளவோம்!! படித்ததை மற்றவருக்கு பகிர்ந்துக்கொள்ளவோம்!!

ஒரு பசுமையான நாடு, அதில் தன் மக்களை செல்வசெழிப்போடு ஆட்சி செய்து வரும் அரசன் இருந்தான். ஒரு நாள் தன் நாட்டு மக்களை பார்வையிட அரச படைகள் இன்றி தனியாக ஒரு காட்டின் வழியே செல்கிறான்.அதை அறிந்த எதிரிகள் அரசரை சிறையிட படையெடுத்தனர். என்னதான் அரசர் பலசாலி என்றாலும் அவரால் அனைவரையும் எதிர்கொள்ள முடியவில்லை.

அதே நேரத்தில் அங்கு மூன்று இளைஞர்கள் உணவிற்காக காட்டுக்குள் பழங்களை சேகரித்து கொண்டு இருந்தனர். அருகில் ஏதோ சத்தம் கேட்பதை அறிந்த மூவரும் உடனே அங்கு சென்று ஆபத்தில் இருந்த அரசரை காப்பாற்றி, அரசரை பாதுகாப்பாக அரண்மனைக்கு கொண்டு சேர்த்தனர். இந்த மூன்று இளைஞர்களின் செயலை கண்டு மகிழ்ச்சியுற்றார் அரசர்.

எனவே அரசர் அந்த மூவரையும் பார்த்து “வேண்டியதை கேளுங்கள் நான் தருகிறேன் ” என்றார். அதில் ஒருவன் தனக்கு எல்லையற்ற கடன் இருப்பதாக சொல்லி அரசரிடம் பொற்காசுகளை பெற்று விடைபெற்றான்.இன்னொருவன் தான் காதல் செய்த பெண்ணை மனம் முடித்துத்தர வேண்டி ஆசியை பெற்றான்.

மூன்றாவதாக வந்த இளைஞர் அரசனை பார்த்து ” நீங்கள் வருடத்திற்கு 2 முறை எனது வீட்டில் வந்து தங்க வேண்டும். மற்றபடி என்னக்கு வேறேதும் வேண்டாம் ” என்றான். இதனை கேட்ட அரச சபையே இவனை கேலி செய்து சிரித்தது.பொன்னும் பொருளும் கேட்பான் என்றால் இவன் ஏதோ அரசரை வீட்டுக்கு அழைக்கிறான் ..!!

முட்டாள் என்றெல்லாம் சிலர் கூறினர். ஆனால் அரசர் அவனை பார்த்து மெய்சிலிர்த்தார். காரணம் அரசர் ஒரு இடத்திருக்கு சென்றால் அந்த இடமானது அரசர் வசதிக்கேற்ப அரண்மனைப்போல் இருக்க வேண்டும்.மேலும் செல்லகூடிய பகுதியானது தூய்மையாகவும் செல்வசெழிப்போடும் இருக்க வேண்டும்.எனவே அவன் கேட்டது போல் வருடத்திற்கு இருமுறை அவன் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் அவன் வீட்டை அரண்மனை போல் மாற்ற வேண்டும் அந்த நகரத்தையே செழிப்போடு பராமரிக்க வேண்டும்.

இதனை அறிந்த அனைவரும் அவனின் சிந்தனையை கண்டு வியந்தனர். எனவே கிடைத்த வாய்ப்பு சிறியதோ அல்லது பெரியதோ அதை எப்படி பயனுள்ளதாக மாற்றுக்கிறோம் என்பதிலேயே வெளிப்படுகிறது நமது தனித் திறமை.

“எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற்கு அரிய செயல்”. குறள் (489)

விளக்கம்: எப்போதெல்லாம் வாய்ப்புகள் கிடைக்கிறதோ அப்போதே நாம் செய்ய நினைக்கும் அரியச் செயல்களை செய்து முடித்தல் வேண்டும்.