சிங்கப்பூரில் இம்மாதம் புதிதாக அறிமுகமாகவுள்ள…….

கண்ணா இரண்டு லண்டு தின்ன ஆசையா?? என்பது போல Jurong Town Hall பேருந்து முனையத்துடன் புதிய பேருந்து (870) சேவையும் வரவுள்ளது!!!!

வரும் நவம்பர் 26 ஆம் தேதி அன்று அந்த புதிய பேருந்து முனையம் நடைமுறைக்கு வரவுள்ளது என போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது. இந்த பரிமாற்ற வசதியானது இரண்டு முனைகளுக்கு இடையே மேம்பாலம் மற்றும் லிப்ட் மூலம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்துடன் புதிய பேருந்து (870) சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அறிவித்துள்ளது. இந்த புதிய பேருந்து 870 சேவையானது Tengah நகரம் மற்றும் Jurong East Hall – க்கு இடையேயான போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் அமையும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும்,பயணிகள் மற்றும் ஊழியர்களுக்காக பல்வேறு வசதிகளை ஏற்பாடு செய்துள்ளதாக சிங்கப்பூர் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

அதாவது தானியங்கு கதவுகள் , குழந்தை பராமரிப்பு அறை மற்றும் முதியவர்களுக்கு தேவையான இடவசதி மற்றும் பிரத்யேக கழிவறை போன்றவற்றையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் LTA ஆணையம் கூறியுள்ளது.

அதுமட்டும் இன்றி அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு தேவையான ஓய்வு அறை, கழிவறைகள் மற்றும் இருக்கை வசதி போன்றவற்றையும் உள்ளடக்கியதாகவும் தெரிவித்துள்ளது .