நவம்பர் 3ஆம் தேதி அன்று Geylang சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் திருடுவதற்காக கதவை உடைத்து உள்ளே நுழைந்த 31 வயதுடைய நபர்.
இச்சம்பவம் காலை 11:05 மணியளவில் நடந்ததாகவும், $121 சிங்கப்பூர் டாலர் பணம் திருடப்பட்டதாகவும் காவல்துறையினருக்கு புகார் கிடைத்தது.
மேலும், அந்த நபர் தப்பிக்க முயன்ற போது உணவகத்தின் ஊழியரை எட்டி உதைத்ததாகவும், அவரை குத்தியதாகவும் தெரிவித்தனர்.
அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் அந்த நபரை அடையாளம் கண்டனர். காவல்துறை அந்த நபரை நெருங்கிய போது, அவர் எச்சில் துப்பி, தகாத வார்த்தைகளால் அவர்களை திட்டியதோடு மட்டுமல்லாமல், 42 வயதான ஒரு அதிகாரியின் முகத்தில் குத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
அந்த அதிகாரிக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதால், அவரை மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு, அன்றைய நாளிலேயே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் .
அந்த நபரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அத்தோடு அபராதமும் விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இது போன்ற ஆபத்தை விளைவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.