சிங்கப்பூருக்குள் நுழைய தடை!!குப்பை பையை பயன்படுத்தி நீந்தியே மீண்டும் நுழைந்த வெளிநாட்டவருக்கு பிரம்படி!!

சிங்கப்பூருக்குள் நுழைய தடை விதித்தும் மீண்டும் சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இந்தோனேஷியர். சட்டவிரோத குற்றத்திற்காக, இந்தோனேசியாவை சேர்ந்த 34 வயதான Mohammad Izal என்ற நபருக்கு, 15 மாதங்கள் சிறை தண்டனையும், ஏழு பிரம்படிகளும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இவர் ஏற்கனவே குடியேற்ற குற்றங்களுக்காக நான்கு முறை குற்றம் சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சட்டவிரோத குடியேற்ற குற்றத்திற்காக சிறைத் தண்டனை அனுபவித்தார். தண்டனை காலம் முடிந்ததும் இந்தோனேஷியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டார்.இவர், சட்டவிரோதமாக வேலை வாய்ப்பை பெறுவதற்காக, மீண்டும் சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முடிவு செய்தார்.

இந்தோனேசியாவில் இருந்து மலேசியாவிற்கு படகில் வந்தார் என்றும், பிறகு கருப்பு நிற ஊதப்பட்ட பிளாஸ்டிக் பையை பயன்படுத்தி அங்கிருந்து நீந்தி சிங்கப்பூருக்கு வந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், சிங்கப்பூரில் 10 மாதங்கள் சட்டவிரோதமாக தங்கி இருந்தார் என்று கூறப்பட்டது.

கடந்த அக்டோபர் மாதம் 23-ஆம் தேதி சிக்கினார்.

அவருக்கு குழந்தைகள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பெற்றோர் இருப்பதாக நீதிமன்றத்தில் கூறினார்.