ஒரு சின்ன டவுட்!! வீட்டு உரிமையாளர்கள் , விடுமுறை பயணத்திற்காக வெளிப் பயணம் மேற்கொண்டால் தனது வீட்டில் பணி புரியும் வெளிநாட்டு இல்லப்பணியாளரை எங்கே விட்டு செல்வது??? வாங்க தெரிந்துகொள்ளலாம்!!

வீட்டு உரிமையாளர்கள் , விடுமுறை பயணத்திற்காக வெளிப் பயணம் மேற்கொண்டால் தனது வீட்டில் பணி புரியும் வெளிநாட்டு இல்லப்பணியாளரை எங்கே விட்டு செல்வது??? வாங்க தெரிந்துகொள்ளலாம்!!

சிங்கப்பூரில் , வெளிநாட்டில் இருந்து புலம்பெயர்ந்து வந்த வீட்டு வேலையாட்களே பெரும்பாலும் உள்ளனர்.இவ்வாறு இருக்கையில் , வீட்டு உரிமையாளர்கள் தொடர் விடுமுறை நாட்களில் வெளிப் பயணமோ அல்லது சுற்றுலாவோ செல்வதுண்டு.அப்போது தனது வீட்டு பணியாளரை வீட்டிலேயே விடலாமா ?? விடுதிகளிலோ அல்லது மற்ற உறவினர்கள் வீடுகளில் விடலாமா?? என்றும் , அவ்வாறு விடுவதென்றால் முறையான வழிமுறைகள் என்னவென்றும்?? வீட்டு உரிமையாளர்களுக்கு சந்தேகம் வருவதுண்டு.

மேலும் இத்தகைய நாட்களில் வேலையாட்களுக்கு சம்பளம் தரவேண்டுமா?? என்ற கேள்விகளும் எழும்.

இதன் வழிமுறைகள் இதோ: முதலில் , வெளிநாட்டில் இருந்து வந்த வேலையாட்களுக்கு வீட்டு உரிமையாளர்களே அவர்களின் பாதுகாப்பிற்கும் , நலனுக்கும் முக்கிய பொறுப்பாகும். விடுமுறை பயணத்தின் போதும் வீட்டு வேலையாட்களுக்கு சம்பளம் கண்டிப்பாக தரவேண்டும்.மேலும் அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வீட்டுலேயே விட்டுவிடலாம் அல்லது அவர்களின் சொந்த நாட்டிற்கு செல்ல வழிவகை செய்து கொடுக்கலாம்.

அல்லது விடுதிகளிலோ, உறவினர்கள் வீட்டிலேயோ விடுவதென்றால் முறையான அனுமதியை MOM அமைச்சகத்திடம் பெறுதல் வேண்டும். அவ்வாறு அனுமதி பெறவேண்டும் என்று விரும்பினால் , வீட்டு உரிமையாளர்கள் தங்களது விடுமுறை பயணத்திற்கு ஒரு வாரம் முன்னரே ஆன்லைன் மூலம் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்புதல் அவசியம்.