இந்தோனேசியாவில் அதிகப்படியான நச்சுத்தன்மை கொண்ட இருமல் மருந்தை உட்கொண்டதால் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்தனர்.இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
இந்த இருமல் மருந்தை தயாரித்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி(CEO) மற்றும் மூன்று அதிகாரிகளுக்கு, இந்தோனேசிய நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை நவம்பர் 1-ஆம் தேதி (நேற்று) தீர்ப்பளித்துள்ளது.
மேலும் அதிகாரிகளின் அலட்சியமே இதற்கு காரணம் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.