அப்பப்பா..!! என்னா வெயிலு..!! அக்டோபர் மாதத்தில் சிங்கப்பூரில் வெளுத்துவாங்கிய வெப்பநிலை!!

அக்டோபர் மாதத்தின் முதல் வாரங்களில் வெப்பநிலை அதிகமாக காணப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும் சென்ற வருடங்களை காட்டிலும் அதிகபட்ச வெப்பநிலை அக்டோபர் மாதத்தில் பதிவானது இதுவே முதல் முறை எனலாம்.

மேலும் அக்டோபர் 9 – ஆம் தேதி அதிகபட்ச வெப்பநிலையாக 36.3 டிகிரி செல்சியஸை தொட்டது குறிப்பிடத்தக்கது.

என்னதான் அக்டோபர் முதல் வார நாட்களில் , ஒரு சில இடங்களில் மூடுப்பனி காணப்பட்டாலும் அக்டோபர் இரண்டாம் பாதியில் வழக்கத்தை விட குறைவான சதவிகிதத்திலேயே மழைப்பொழிவு காணப்பட்டது.

நவம்பர் மாத வானிலை ஆய்வுகளின் படி , நவம்பர் மாதம் முழுவதும் சற்று மிதமான வானிலை நிலவும் என கூறப்பட்டுள்ளது.

அத்தோடு நவம்பர் முதல் பாதியில் குறைந்தபட்ச மழைபொழிவும், இரண்டாம் பாதியில் இடியுடன் கூடிய மிதமான மழைப்பொழிவுக்கு வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.