துணிக் கடைகளையும் விட்டு வைக்காத கும்பல்!!! என்னயா… நடக்குது இங்க!!

செய்யும் செயலில் ஒரு மாற்றம் தேவை என்பது நாம் அறிந்தவையே. அதற்காக திருட்டில் கூடவா மாற்றம் தேவை?? என்று சிந்திக்க வைக்கிறது இந்த திருட்டு சம்பவம்.

அக்டோபர் 16- ஆம் தேதி சிங்கப்பூரில் Orchard சாலையில் உள்ள துணிகள் விற்பனை கடைகளில் திருட்டு முயற்சி ஏற்பட்டதை அடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் 10 பேர் அடங்கிய கும்பல் போலீசாரால் கைது செய்யப்பட்டார்கள்.

மேலும் முதற்கட்ட விசாரணையில் , குற்றம் சாட்டப்பட்ட ஏழு ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் அடங்கிய இந்த கும்பல் இதுபோன்ற பல இடங்களில் நூதனமாக, விலை உயர்ந்த ஆடைகளை மட்டுமே குறிவைத்து திருடியதாக தெரியவந்துள்ளது.

இது மட்டுமின்றி Harbourfront walk – இல் உள்ள சில கடைகளிலும் இவர்கள் கைவரிசையை காட்டியுள்ளதும் அம்பலமாகியுள்ளது.

கடைகளில் திருட்டு போனதாக கூறப்படும் ஆடைகள் அனைத்தையும் பறிமுதல் செய்ததின் அடிப்படையிலும் , கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவின் தகுந்த ஆதரங்களின் பேரில் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

விழிப்புணர்வு அறிக்கை: இது போன்ற திருட்டு சம்பவத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள முதலில் கண்காணிப்பு கேமரா போன்ற அம்சங்களை பொருத்துதல் அவசியம். Shift முறையில் வேலை ஆட்களை ரோந்து பணியில் ஈடுபட செய்யலாம்.இவ்வாறு செய்வதின் மூலம் அடிப்படை திருட்டு சம்பவங்களில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம்.” வரும் முன் காப்பாதே நலம்”