சிங்கப்பூரின் எட்டாவது அதிபரும், முதல் பெண் அதிபர் மேடம் Halimah Yacob அவர்களுக்கு அந்நாட்டின் உயரிய விருதான Order of Temasek (With High Distinction) விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தேசிய விருது பெற்றவர்களின் பட்டியலில் இவரது பெயர் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய விருதுகள் வழங்கும் விழா அக்டோபர் 29ஆம் தேதி(ஞாயிற்றுகிழமை) அன்று நடைபெற உள்ளது.
இந்த விழாவில், அதிபர் தர்மன் சண்முகரத்தினம் முன்னாள் அதிபர் Halimah Yacob அவர்களுக்கு இந்த உயரிய விருதை வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டது.
நேற்று பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்தது.