இணையவாசிகளின் பாராட்டுக்களை குவிக்கும் “கருணை உள்ளம்”- வைரலாகும் வீடியோ!!!!

கடந்த சனிக்கிழமை அன்று Simaleilei எனும் பயனர் தனது டிக்டாக் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.அந்த வீடியோ பதிவிட்ட சற்று நேரத்தில் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வரவேற்பை பெற்றது.

அப்படி அந்த வீடியோ வைரலாக காரணம் என்ன ? என்பதை காண்போம்.

சிங்கப்பூரில் உள்ள டோ குவான் சாலையில் போக்குவரத்து நெரிசலில், சிக்னல் விளக்கை கவனித்தப்படி வாகன ஓட்டிகள்.விரைவாக சாலையை கடைக்கும் பாதசாரிகள்.இவர்களுக்கு இடையில், மளிகை பைகளால் நிரம்பிய சிறிய தள்ளுவண்டியினை கைகளால் பிடித்தப்படி சாலையை கடக்க முயற்சி செய்யும் மூதாட்டி . மேலும் சற்று நேரத்தில் சிவப்பு நிற ஒளியில் இருந்து பச்சை நிற ஒளிக்கு மாறவிருக்கும் சிக்னல் விளக்கு.

இப்படி இருக்கையில் , சாலையை கடக்க முடியாமல் தவிக்கும் மூதாட்டிக்கு யாரும் உதவ முன்வராத நிலையில், தீடீர் என்று சூப்பர் ஹீரோ போன்று வந்த ஒரு நபர் கண்ணிமைக்கும் நொடிக்குள் மூதாட்டிக்கு சாலையை கடக்க உதவியதை காட்சி படுத்துவதாக இருந்தது அந்த வீடியோ.

இது இணையவாசிகளை பெரிதும் கவர்ந்தது.மேலும் அந்த நபர் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார்.அத்தோடு உதவாமல் பார்த்துக்கொண்டு இருந்தவர்களின் செயலையும் கண்டு வருந்துவதாகவும் தங்களின் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

“புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறவரிதே ஒப்புரவின் நல்ல பிற” – குறல் (213) பிறருக்கு உதவி செய்யும் நல்ல எண்ணத்தை விட இவ்வுலகில் உயர்ந்த எண்ணம் எதுவும் இல்லை. எனவே முடிந்தவரை உதவி செய்வோம்!!