இப்படியுமா மோசடி செய்வாங்க!!பில்லை கட்ட சொன்னா நெஞ்சுவலி……

ஸ்பெயினில் பிளாங்கா நகரில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் இருப்பதற்காக நெஞ்சுவலி வந்தது போல் நடித்து ஏமாற்ற முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு வயது 50.அவரின் படத்தை முன்னெச்சரிக்கையாக அருகில் உள்ள உணவகங்களில் காவல்துறை கொடுத்தனர்.

அந்த நபர் செப்டம்பர் மாதம் ஓர் ஹோட்டலில் உள்ள உணவகத்தில் இதே உத்தியை பயன்படுத்தி மோசடி செய்ய முயன்ற போது கையும் களவுமாக சிக்கி கொண்டார்.

உணவகத்தில் சாப்பிட்டு விட்டு பில்லை கட்டாமல் அங்கிருந்து வெளியே செல்ல முயன்றுள்ளார். அப்போது உணவக ஊழியர் ஒருவர் அவரைத் தடுத்து நிறுத்தினார்.

பணத்தை ஹோட்டல் ரூமிலிருந்து எடுத்து கொண்டு வர போவதாக கூறியுள்ளார்.

ஆனால் உணவக ஊழியர் அவரை வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை.

திடீரென நெஞ்சுவலி வந்தது போல் நடித்துள்ளார். ஆம்புலன்ஸை அழைக்குமாறு உணவகத்திடம் சொன்னார்.

உணவகம் அதற்கு மாறாக காவல்துறையை தொடர்பு கொண்டது.

காவல்துறை உணவகத்துக்கு விரைந்தது.

உணவகங்களில் சாப்பிட்டு விட்டு பில்லை கட்டாமல் ஏமாற்றியவர் என்பதை உறுதி செய்தது.அதன்பின் அவரை கைது செய்தது.

இதுவரை 20 க்கும் அதிகமான உணவகங்களில் மோசடி செயலில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.