பொருளாதார மேம்பாட்டு உறவை வலுப்படுத்தும் முயற்சியில் சிங்கப்பூர் மற்றும் சவுதி அரேபியா!!!

கடந்த 46 ஆண்டுகளாக வலுவான உறவில் , சிங்கப்பூர் மற்றும் சவுதி அரேபியா இருந்து வருகிறது. நேற்று ரியாத்தில் , சிங்கப்பூர் பிரதமர் லீ அவர்கள் சவுதியின் இளவரசர் ” முகமத் பின் சல்மான் ” அவர்களை நேரில் சந்தித்துள்ளார்.

இதில் நாட்டின் சில முக்கிய துறைகளை மேம்படுத்துவது குறித்தும் மற்றும் இரண்டு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்தும் பேசியுள்ளார்.

இதனை தொடர்ந்து , சவுதியின் இளவரசர் ; சிங்கப்பூர் பிரதமர் லீ அவர்களின் மேம்பாட்டு திட்ட நோக்கத்தை பாராட்டும் வகையில் ஒப்புதல் அளித்துள்ளார்.மேலும் சிங்கப்பூர் உடனான உறவில் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறியுள்ளார்.

சவுதியின், நாட்டை பன்முக பொருளாதாரமாக மாற்றும் திட்டம் “விஷன் 2030 ” க்கு சிங்கப்பூர் அரசு பெரும் வரவேற்பு அளிக்கும் எனவும் கூறியுள்ளார் பிரதமர் லீ.

போக்குவரத்து , விவசாயம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் , பசுமை திட்டம் போன்ற பல முக்கிய துறைகளில் இரு நாடுகளும் கூட்டு முயற்சியில் மேம்படுத்தப்பட போவதாக இரு நாடுகளுக்கு இடையே ஒப்புதல் உறுதி படுத்தப்பட்டுள்ளது.