இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் LinkedIn தனது பொறியியல், திறனாளர் மற்றும் நிதி ஆகிய பிரிவுகளில் உள்ள 668 ஊழியர்களை குறைந்த வருவாய் வளர்ச்சி காரணமாக பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது.
இதனால் 20,000 ஊழியர்களில் 3 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த ஆண்டு முதல் பாதியில் சுமார் 141,516 ஊழியர்களை தொழில்நுட்ப துறையானது பணி நீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மே மாதம் LinkedIn சுமார் 716 வேலைகளை குறைக்க முடிவு செய்திருந்தது.